புளாக்கர் செட்டிங்க்ஸில் மாற்ற வேண்டியவை
சரியான டெம்ப்ளேட்டைப் போட்டுக்கொண்டதுடன், சில முக்கியமான செட்டிங்குகளையும் மாற்றவேண்டும். அவை கீழே தரப்பட்டுள்ளன: மறுமொழிகள் எழுதும் நேரத்தில் தேதி முத்திரை: வழக்கமாக மறுமொழிகள் எழுதப்படும்போது நேரம் மட்டுமே தெரியும். (உ.ம். 11:45 PM ) ஆனால் கூடவே தேதியும் தெரிந்தால்தான் நல்லது. இதற்கு செய்யவேண்டியது கீழே தரபட்டுள்ளது. நேரத்துடன் தேதி காட்டுவதில் பல முறைகள் இருந்தாலும், மாதத்தை எண்ணால் காட்டாமல் எழுத்தால் காட்டும் முறையே மேலானதாகும். ஏனென்றால் அமெரிக்காவில் ஒருமாதிரியும், மற்ற இடங்களில் வேறு மாதிரியும் இந்த மாத/தேதி வரிசை இருப்பதால், சில சமயம் குழப்பம் வரலாம். அதையும் யோசித்து செய்தால் நல்லது.
பிறகு பின்னூட்டங்களை மாடரேஷன் செய்யுமாறு அமைத்துக்கொள்ளவேண்டும். இதனால், போலி, ஆபாச பின்னூட்டங்கள் மற்றவர் பார்வைக்குப் போகும் முன் தடுத்து விடலாம். இதை செய்வது கீழே காட்டப்பட்டுள்ளது. இத்தொடு பின்னூட்டங்களை தனி விண்டோவில் காட்டுவதையும் வேண்டாம் என்று செய்துவிடுதல் நல்லது. ஏனென்றால் நான் கொடுத்துள்ள டைனமில் ஃபாண்ட் நம் வலைப்பதிவு பக்கத்தில் மட்டுமே வேலை செய்யும். இந்தப் புது Pop-up windowவில் கட்டம் கட்டமாகத் தெரிவது இதனால் தவிர்க்கப்படும். அத்துடன் Word verificationஐயும் சேர்த்துக்கொள்வதால், வயாகரா விளம்பரம் போன்ற தேவையற்ற பல பின்னூட்டங்களை தவிர்க்கலாம்.
இந்த டெம்ப்ளேட்டில் ஏதாவது குறை இருப்பின் தயவு செய்து மறுமொழியில் எழுதுங்கள்.



